Gold Price Today: அதல பாதாளத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.2,480 சரிந்தது.. வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று பெரியளவில் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.200-ஐ தொட்டுள்ளது.

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாகவே சரிந்து வருகிறது. நேற்றும் விலை குறைந்தது. தங்கம் விலை நேற்று ரூ.1,240 குறைந்து இருந்த நிலையில் இன்று ரூ.2,480 குறைந்துள்ளது.

Gold Price Today gold price Akshaya Tritiya gold gold rate

உச்சத்தில் இருந்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நடப்பு ஆண்டு ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆனது. கடந்த மார்ச் மாதம் ஒரு சவரன் வரலாற்றில் இல்லாத அளவாக ரூ.1.30 லட்சத்தை தொட்டது.

ஆனால் அதன்பிறகு புதிய உச்சம் தொடாத தங்கம் விலை தொடர்ந்து சரிவதும் ஏறுவதுமாக இருந்தது. ரூ.1.15 லட்சம் என்ற அளவில் இருந்து வந்தது. கடந்த 8 மாதங்களாகவே தங்கம் விலை புதிய உச்சம் தொடாமல் இருந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ரூ.1.24 லட்சம் என்று சென்றாலும் அதன் பிறகு மீண்டும் குறைய ஆரம்பித்தது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்து வந்தது. இடையில் ஒரு சில நாட்கள் உயர்ந்தாலும் மீண்டும் குறைந்தது. அந்த வகையில் தான் தற்போதும் தங்கம் விலை இமாலய அளவில் சரிந்துள்ளது. நேற்றும் விலை குறைந்தது. தங்கம் விலை நேற்று ரூ.1,240 குறைந்து இருந்த நிலையில் இன்று ரூ.2,480 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று

தங்கம் விலையை போன்றே இன்று வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.200க்கு குறைந்து இருப்பது வெள்ளி பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+