Gold Price Today: காலையிலேயே இன்ப அதிர்ச்சி தந்த தங்கம் விலை! ஒரே நாளில் அதிரடி சரிவு.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த இரு நாட்களாக அதிகரித்து அதிர்ச்சி கொடுத்து வந்தது. இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து இன்ப அதிர்ச்சி தந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.280 குறைந்து 1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு பெரும் உச்சத்தை தொட்டது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்தை தொட்டது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தங்கம் விலை சிறிது குறைய தொடங்கியது. குறிப்பாக ஈரான் - அமெரிக்கா போர் ஆரம்பித்த பிறகு தங்கம் விலை சரிந்தது.

தங்கம் விலை குறைந்தது
மார்ச் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரேட் ரூ.1,26,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் குஷியடைந்தனர். தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,12,400 என்ற அளவில் சரிந்தது. ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ரூ.14 ஆயிரம் குறைந்து இருந்தது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியது.
தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில் மீண்டும் குறையத் தொடங்கியதால் குஷியடைந்தனர். அதன் பிறகு சற்று ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,16,000 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகும் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது.
இன்றைய ரேட் என்ன?
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.280 குறைந்து 1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கடந்த சில நாட்களாகவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும்
சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760 (இன்று)
31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.


Click it and Unblock the Notifications
