Gold Price Today: மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இரண்டே நாளில் ரூ.4,400 அதிகரித்தது! ஒரு சவரன் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் உயராமல் இருந்து வந்த நிலையில், நேற்று பெரிய அளவில் ஷாக் கொடுத்தது. நேற்று ஒரே நாளில் காலை மாலை என இரு வேளைகளிலும் மொத்தம் ரூ.2,240 அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.2,160 உயர்ந்து பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று மற்றும் இன்று என இரண்டே நாளில் தங்கம் விலை ரூ.4,400 அதிகரித்து நகை பிரியர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,05,600 என இருந்தது. இன்று ஒரு சவரன் ரூ.1,10,000 - ஆக உயர்ந்துள்ளது. சட்டென ஜெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி செல்வதால் நகை பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Gold Price Today Gold prices have once again soared at jet speed - rising by 4 400 in just two days

தொடர்ந்து சரிந்த தங்கம் விலை

தங்கம் விலை எப்போது கூடும்?, எப்போது குறையும்? என்று நம்மால் கணிக்க முடியாத அளவுக்கு தினம் தினம் ஷாக் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட சவரனுக்கு ரூ.50 ஆயிரம் அதிகரித்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஒரே ஆண்டில் அதாவது நடப்பு ஆண்டில் இது ஒரு லட்சத்தை தொட்டது. கடந்த ஜனவரி கடைசியில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சத்தை தொட்டது.

பிப்ரவரி இறுதியில் ஈரான் அமெரிக்கா போர் நடைபெற்ற போது தங்கம் விலை குறைந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரேட் ரூ.1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் குஷியடைந்தனர். மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதம் தங்கம் விலை மேலும் குறைந்து இருந்தது.

ஒரே மாதத்தில் 14 ஆயிரம் சரிந்தது

கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,12,400 என்ற அளவில் சரிந்தது. ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ரூ.14 ஆயிரம் குறைந்து இருந்தது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தி இருந்தது. அதன் பிறகும் மே, ஜூன், ஜூலை என 3 மாதங்களாகவே தங்கம் விலை பெரிய அளவில் உயரவில்லை. கொஞ்சம் அதிகரித்தாலும், பின்னர் குறைந்துவிடும். இதிலும் கடந்த ஜூலை இறுதியில் தங்கம் மேலும் குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,000-க்கு வந்தது.

திடீரென ஷாக் கொடுத்த தங்கம் விலை

கடந்த (ஆகஸ்ட்) 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,05,600 என இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய ரேட் என்ன?

இந்த நிலையில் இன்று காலையிலும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மற்றும் இன்று என இரண்டே நாளில் தங்கம் விலை ரூ.4,400 அதிகரித்து நகை பிரியர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலையும் கடந்த ஒரு வாரமாக உயராமல் ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சட்டென உயரத் தொடங்கியிருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000 (இன்று)
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840 (நேற்று)

4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720

27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840

23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080

18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+