Gold Price Today: தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,000 சரிந்தது.. நகை பிரியர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) நேற்று அதிரடியாக உயர்ந்து நிலையில் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஷாக் கொடுத்தது. இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது. எனவே நம் ஊரிலும் இன்று தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது.

தங்கம் விலை தினம் தினம் திடீர் ட்விஸ்ட் கொடுத்து வருகிறது. திடீரென ஏறுவதும் பட்டென சரிவதுமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஊசலாட்டத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நடப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் குறைந்தபடி இருந்தது. ஆனால் நேற்று தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold Price Today gold price gold gold rate


ஊசலாடும் தங்கம் விலை

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் மேலும் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு அடுத்த நாளே ஷாக் கொடுத்தது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனையானது. தொடந்து 4 ஆம் தேதியும் தங்கம் விலை உயர்ந்தது. பின்னர் கடந்த 5 ஆம் தேதி சற்று குறைந்தது. தொடர்ந்து நேற்று முன் தினமும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.1,13,040 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை எப்படி?

நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்த நிலையில் நம் ஊரிலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை பெரிய அளவில் ஷாக் கொடுத்தது. சென்னையில் நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை எந்த மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் நம் ஊரிலும் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்பு இருந்தது. அதன்படி இன்று தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.14,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160 (இன்று)
8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (நேற்று)
7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520

5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040

28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+