Gold Price Today: இன்றும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இரண்டே நாளில் ரூ.2,640 அதிகரிப்பு.. நகை பிரியர்கள் ஷாக்
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தங்கம் விலை நேற்று காலையில் திடீரென சர்ப்ரைஸ் தரும் விதமாக சரிந்து இருந்தது. ஆனால் மாலையிலேயே மீண்டும் உயர்ந்து பெரிய அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இரண்டே நாட்களில் தங்கம் விலை ரூ.2,640 அதிகரித்து இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து இருந்தது.

உச்சம் தொட்ட தங்கம் ரேட்
தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து உயரத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை தொடர்ச்சியாக தினம் தினம் புதிய உச்சம் தொட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்துகொண்டே வந்தது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. பின்னர் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த விலை மேலும் மின்னல் வேகத்தில் உயர்ந்து ஒரு சவரன் ரூ1.34 லட்சம் என்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் நகை பிரியர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா ஈரான் போர் காரணமாக தங்கம் விலை சரியத் தொடங்கியது.
மீண்டு உயரத் தொடங்கியது
பெரிய அளவில் தங்கம் விலை குறையவில்லை என்றாலும், புதிய உச்சம் என்ற அளவை தொடாமல் இருந்தது. கடந்த 5 மாதங்களாகவே தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த வித மாற்றமும் இன்றி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760 க்கு விற்பனை ஆனது. கடந்த 5 ஆம் தேதி வரை குறைந்து வந்த தங்கம் விலை 6 ஆம் தேதி மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியது.
சென்னையில் நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் மீண்டும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. மாலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,200-க்கு விற்பனை செய்யபப்ட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,405-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயரத் தொடங்கியிருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800 (இன்று)
19.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,15,200 (நேற்று மாலை)
19.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 (நேற்று காலை)
18.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,320
17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.


Click it and Unblock the Notifications
