Gold Price Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 அதிகரிப்பு.. சென்னையில் ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் நிலையில் இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 அதிகரித்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று பெரிய அளவில் உயர்ந்ததால் நம் ஊர் சந்தையிலும் இது எதிரொலித்துள்ளது. வெள்ளி விலை இன்றும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நாள்தோறும் ட்விஸ்ட் கொடுத்து வருகிறது. திடீரென ஒரு மூன்று நாட்களுக்கு கூடுவதும் பின்னர் மூன்று நாட்களுக்கு சரிவது என ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து நடப்பு மாதம் பிப்ரவரி கடைசி வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதுப் புது உச்சம் தொட்டு வந்ததால், மீண்டும் தங்கம் விலை உயர்ந்துவிடுமோ என நகை பிரியர்கள் அச்சமடைந்தனர்.

Gold Price Today Gold prices skyrocketed today surging by Rs 880 in a single day - jewelry buyers shocked

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை

ஆனால் கடந்த 8 மாதங்களாக பெரிய அளவில் தங்கம் விலை உயராமல் இருந்து வந்தது. மாறாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. இதனால் கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி தங்கம் விலை ரூ.1,05,760 என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி மேலும் குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600 என்ற அளவுக்கு குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு பிறகு மீண்டும் மின்னல் வேகத்தில் தங்கம் விலை உயரத் தொடங்கியது.

தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை, கடந்த 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை ஆனது. ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் அதிகரித்தது நகை பிரியர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் மீண்டும் தங்கம் விலை சரிந்து, அதற்கு மறுநாளே ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் குறையுமா என எதிர்பார்த்த நிலையில் அதிகரிக்கவே செய்தது.

இன்று அதிரடியாக உயர்ந்தது

இப்படியே ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்தது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.14,145க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய ரேட் என்ன?

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று பெரிய அளவில் உயர்ந்ததால் நம் ஊர் சந்தையிலும் இது எதிரொலித்துள்ளது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலை இன்றும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040 (இன்று)
9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160 (நேற்று)
8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520

5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040

28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+