Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் நேற்று தடாலடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்த நிலையில் இன்றும் 2வது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த 30 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்தது. சுமார் 8 நாட்களில் சவரனுக்கு ரூ.8 ஆயிரம் சரிந்து இருந்தது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால் இது தான் சரியான நேரம் என தங்க நகை வாங்க பிளான் செய்தவர்களுக்கு நேற்று ஒரே அடியாக அதிர்ச்சியை கொடுத்தது தங்கம் விலை.

திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் மேலும் குறைந்தது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது. கிராமுக்கு ரூ.300 குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்ததால், நேற்றும் தங்கம் விலை சரமாரியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடாலடியாக உயர்ந்தது. எப்படி குறைந்ததோ அதே வேகத்தில் நேற்று உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்தது. இதனால் நேற்று ஒரு சவரன் ரூ.1,10,400- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை என்ன?
இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போன்று இன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!














Click it and Unblock the Notifications