Gold Price Today: 3வது நாளாக அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்றும் எகிறியதால் நகை பிரியர்கள் கவலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.73,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,140க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Gold Price Today Gold Rises for Third Consecutive Day Up by 520 per Sovereign in Chennai

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது.

ஜூலை மாதத்தில்

இந்த ஜூலை மாதம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கங்களுடன் இருந்த தங்கம் விலை, இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது நகை பிரியர்களை கவலையுறச் செய்துள்ளது. இந்த மாதத்தில் இன்று தான் உச்சபட்ச விலையை எட்டியுள்ளது.

ஜூலை 10 ஆம் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.9,020க்கும், ஒரு சவரன் ரூ.72,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,075க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை

இந்நிலையில் இன்று (ஜூலை 12 - சனிக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.73,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,140க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களில் கடந்து வந்த பாதை

12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ.71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ.71,440

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+