Gold Rate Today: தங்கம் விலை புதிய உச்சம்.. ராக்கெட் வேகத்தில் ஏறும் மதிப்பு! 63 ஆயிரத்தை தாண்டியது
சென்னை: நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை நாம் கனவில் தான் வாங்க முடியுமோ என்று எண்ணி வருகிறார்கள். இன்று தங்கம் விலை குறையுமா அல்லது மீண்டும் புதிய உச்சம் தொடுமா என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், மீண்டும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு இன்று ரூ.95 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.7905க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 760 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.63,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள் இனி தங்கத்தை கனவில் தான் வாங்க முடியுமோ? என எண்ணும் அளவிற்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

விண்ணை தொடும் தங்கம் விலை
தங்கம் விலை 60 ஆயிரத்தை தொடுமோ என நினைத்த காலம் போய், எங்கு 70 ஆயிரம் போய் விடுமோ? என நினைக்கும் அளவுக்கு தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி ரூ.61 ஆயிரத்தையும் தாண்டியது. அதன் தொடர்ச்சியாக மறுநாளே ரூ.62 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. இடையிடையே சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் கூட விலை கூடுவதே அதிகமாக உள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் பவுனுக்கு ரூ.680 குறைந்து இருந்தது. இதனால் நகை பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதாவது நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 840 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூபாய் 105 உயர்ந்துள்ளது.
இன்று புதிய உச்சம்
இதன் மூலம் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,810க்கும், சவரன் ரூ.62,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 107க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கு விற்பனை செய்யப்பட்டது.
டிரம்பின் இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள், அறிவிப்புகளும், உலக சந்தையில் தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அதன் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரும் என சொல்லப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறையுமா என்று நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை 63,000 கடந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் 7,810க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 95 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,905க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.62,400க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.63,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:
05.02.2025- (இன்று) ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ. 62,400
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,960
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
31.01.2025- ஒரு சவரன் ரூ.61,840
30.01.2025- ஒரு சவரன் ரூ.60,880
29.01.2025- ஒரு சவரன் ரூ.60,760
28.01.2025- ஒரு சவரன் ரூ.60,080
27.01.2025- ஒரு சவரன் ரூ.60,320
26.01.2025- ஒரு சவரன் ரூ.60,440












Click it and Unblock the Notifications