Gold Price Today: நகை பிரியர்களை ஏமாற்றிய தங்கம் விலை.. இறங்கும்னு நினைச்சால் இப்படி ஆகிடுச்சே! இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) நேற்று முன் தினம் சரிந்த நிலையில் இன்று விலை குறையும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இன்று தங்கம் விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை ஆகின்றது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி சென்னையில் ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நம் நாட்டில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. தங்கம் விலையை பொருத்தவரை கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

Gold Price Today No change in gold prices What is today rate in chennai

ஏறி இறங்கிய தங்கம் விலை

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உலகளாவிய வரி பிரச்சனை போன்றவற்றாலும் தங்கம் விலையானது கடுமையாக உயர்ந்ததாக நிபுணர்கள் கணித்தனர். அதன்படியே நடப்பு ஆண்டிலும் தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரித்தது.

ஆனால் அதற்கு பிறகு தங்கம் விலை கடந்த 8 மாதங்களாக சரிந்து வருகிறது. பெரிய அளவில் குறையவில்லை என்றாலும் ஒரு சவரன் ரூ.1.15 லட்சம் என்ற அளவில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதே சமயம் தங்கம் விலை கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி.. அதன் மீதான ஈர்ப்பு மக்களிடம் குறையவில்லை.

தொடர் சரிவு

அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடாக மட்டும் இல்லாமல், அணிகலனாகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் தங்க ஆபரணங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையும் வர உள்ளதால் நகை பிரியர்கள் பலரும் தங்கம் விலை நிலவரத்தை உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 100 குறைந்து ரூ.13,675-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்று விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை ஆகின்றது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி சென்னையில் ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,400 (இன்று)
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,400
02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320

30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,120
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,120 (காலை)

27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080

21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080

1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+