Gold Rate Today: ஒரே நாளில் 2 முறை விறுவிறுவென விலை ஏறி அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்று சரிவு!
சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,075 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,600க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக 2 முறை உயர்வைச் சந்தித்து வந்தது. இதனால் இன்று என்ன ஆகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க வர்த்தகப் போர், நாடுகளுக்கு இடையேயான பதற்றச் சூழல் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
தங்கம் விலை உயர்வு
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். 2025 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 68,080-க்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,200 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 74,320-க்கு விற்பனை ஆனது. அதிரடியாக உயர்ந்தது போல அடுத்த நாளே ஏப்ரல் 23) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையானது.
தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் அடுத்த 4 நாட்களுக்கு தங்கம் விலையில் மாற்றமின்றி இருந்து வந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.72,120க்கே விற்பனை செய்யப்பட்டது. 28 ஆம் தேதி திங்கட்கிழமை மார்க்கெட் திறந்ததும் தங்கம் விலை மேலும் சரிந்தது.
சென்னையில் நேற்று முன்தினம் (மே 5) காலை ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்கப்பட்ட தங்கம் அதே நாளில் மாலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது. நேற்று காலை சவரனுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.72,200க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை, தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.600 உயர்ந்து 72,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்று சற்று சரிவு
இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,075 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,600க்கு விற்பனை ஆகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,455க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.59,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600 (இன்று)
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800 (நேற்று மாலை)
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200 (நேற்று காலை)
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560












Click it and Unblock the Notifications