Gold Price Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே மளமளவென உயர்வு.. சென்னையில் ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் முழுக்க உயர்ந்து வந்தது. இந்த வாரத்திலாவது குறையுமா என எதிர்பார்த்த நிலையில் வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியினை கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஆண்டில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்தது. தினம் தினம் புதிய உச்சத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நடப்பு ஆண்டு தொடக்கத்திலும் நீடித்தது. நடப்பு ஜனவரி மாத இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய உயரத்தை தொட்டது. இதனால் தங்க நகைகளை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என நகை பிரியர்கள் கவலையடைந்தனர்.

Gold Price Today surged sharply on the very first day of the week gold goes up by Rs 560 per sovereign

முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை

இந்த சூழலில் தான் அமெரிக்க ஈரான் போர் நடந்தது. கடந்த பிப்ரவரி இறுதியில் ஏற்பட்ட போரின் காரணமாக தங்கம் விலை மீண்டும் சரியத் தொடங்கியது. அதுவரை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 4 மாதங்களாக பெரிய அளவில் உயராமல் இருந்து வருகிறது. குறிப்பாக மீண்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது போல தோன்றியது.

சில நாட்களில் தங்கம் விலை உயர்ந்தாலும் மீண்டும் குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வந்தது. இதனால் சீக்கிரம் தங்கம் நகை வாங்கிவிட வேண்டும் என நகைபிரியர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இப்படி தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் தொடக்கத்திலேயே உயரத் தொடங்கியது. தொடர்ந்து கடந்த வாரம் முழுக்க ஏற்றத்துடனேயே தங்கம் விலை இருந்து வந்துள்ளது.

இதனால் இந்த வாரத்தின் தொடக்கத்திலாவது மீண்டும் தங்கம் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிகரித்து இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

நேற்று முன் தினம் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. ரூ.70 உயர்ந்து, ரூ.13,300க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 அதிகரித்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.560 அதிகரித்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960 (இன்று)
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840

23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080

18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+