Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை
சென்னை: தங்கம் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.ரூ.12,890க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.1,03,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.254க்கு விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. அவசரத் தேவைக்காக தங்கத்தை அடமானம் வைத்து கல்வி, மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்துவது வழக்கமானதாகும். ஆனால் தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து உயர்ந்திருப்பது, வரும் காலங்களில் நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் தங்கம் விலை டிசம்பர் 15ஆம் தேதி ஒரு லட்சத்தை கடந்தது. அதன்பின் அவ்வப்போது சிறிது இறங்கினாலும், மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் அளவிலேயே நிற்கிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,820க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,890க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.1,03,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.254க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் சோகத்தில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications