மீண்டும் வரலாறு படைத்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை!
சென்னை: இன்று காலையில் தங்கம் சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் 13,000 ரூபாயைத் தொட்டது. இந்நிலையில் மாலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் ஒரு உச்சத்தை எட்டியது. தங்கம் சவரனுக்கு மீண்டும் 800 ரூபாய் உயர்ந்து 1,04,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே முதலீடாக தங்கம் மட்டுமே இருந்து வருகிறது. அவசரத் தேவைக்காக தங்கத்தை அடமானம் வைத்து கல்வி, மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்துவது வழக்கமானது. அதேபோல் தங்கம் மீதான முதலீடு லாபத்தை தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
தற்போது தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து உயர்ந்து கொண்டே செல்வது நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. டிசம்பர் 15ஆம் தேதியே தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,890க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,03,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.254 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
சென்னையில் தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கு விற்பனையானது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மாலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் ஒரு உச்சத்தை எட்டியது. தங்கம் சவரனுக்கு மீண்டும் 800 ரூபாய் உயர்ந்து 1,04,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
இனி தான் ஆட்டத்தை ஆரம்பிக்க போகுது தங்கம்.. சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்க போகும் முடிவு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications