Gold Rate Today: ரூ.1 லட்சத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.960 குறைவு.. சவரன் ரூ.99,840க்கு விற்பனை!
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரு லட்சத்திற்கு கீழ் சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.99,840க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து, 12,480க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.257க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தங்கம் விலை கடந்த 8 மாதங்களில் சவரனுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது.
அதன் உச்சமாக டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை, உச்சமாக ரூ.1.04 லட்சம் வரை சென்றது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. குறுகிய கால லாப நோக்கில் தங்கத்தை வாங்கி விற்பது அதிகரித்திருப்பதால், தங்கம் விலை திடீரென சரிவை சந்திப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் நாளை புத்தாண்டு என்பதால், தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. பலரும் புத்தாண்டையொட்டி தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,04,160க்கு விற்பனையான நிலையில், நேற்று மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.420 குறைந்து, ரூ.12,600க்கு விற்பனையானது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,80க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து, ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனையாகியது. இதனால் 3வது நாளாக தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப தங்கம் விலை 3வது நாளாகவும் சரிந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,550க்கு விற்பனையாகியது. அதெபோல் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,400க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி அதே விலையான ரூ.258க்கு விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் தங்கம் விலை 2வது முறையாக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 சரிந்த நிலையில், ஒரு கிராம் ரூ.12,480க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.99,840க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.257க்கு விர்பனையாகி வருகிறது. புத்தாண்டுக்கு முன் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications