Gold Rate Today: 4வது நாளாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 சரிந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் தங்கம் சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.99,520க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 சரிந்து, ஒரு கிராம் ரூ.256க்கு விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தங்கம் விலை கடந்த 8 மாதங்களில் சவரனுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது.
அதன் உச்சமாக டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை, உச்சமாக ரூ.1.04 லட்சம் வரை சென்றது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. அதிலும் புத்தாண்டுக்கு முந்தைய நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை சரிந்ததால், நகை பிரியர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில் நேற்று ஒருநாளில் மட்டும் 2 முறை தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு ரூ.50 சரிந்த தங்கம் விலை, மாலையில் ரூ.70 சரிந்தது. இதனால் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.120 சரிந்ததால், ஒரு கிராம் தங்கம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் காரணமாக தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.99,480க்கு விற்பனையாகியது. அதேபோல் வெள்ளி விலையும் ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.257க்கு விற்பனையாகியது. புத்தாண்டு தினமான இன்றும் தங்கம் விலையில் சரிவு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. அதற்கேற்ப 4வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 சரிந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் தங்கம் சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.99,520க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 சரிந்து, ஒரு கிராம் ரூ.256க்கு விற்பனையாகி வருகிறது. மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications