Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.15,120க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த சூழலில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருப்பது சாமானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தங்கம் விலை 2 மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தது. இந்த நிலையில் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக பிப்ரவரி கடைசி முதல் தங்கம் விலை அடுத்த உச்சத்தை எட்டும் என்று கருதப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கம் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் பலரும் தங்கம் வாங்க நகைக் கடையை நோக்கி படையெடுத்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் பெற தொடங்கி இருக்கிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.14,950க்கு விற்பனையாகியது.
ஆனால் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,20,400க்கும், ஒரு கிராம் ரூ.15,050க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்லி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.15,120க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications