Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்!
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த ஒரு வாரமாகவே கூடுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால் இன்றாவது குறையுமா என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சவரனுக்கு ரூ.1,840 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தினந்தோறும் மாறி மாறி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1.24 லட்சம் என்று இருந்த நிலையில் தற்போது தங்கம் விலை மளமளவென சரிந்து வருகிறது. தொடர்ந்து சரிந்த தங்கம் விலை திடீரென ஏறவும் தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் உயர்ந்துவிடுமோ என எதிர்பார்த்த நிலையில் பின்னர் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை
ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது. இதனால் இப்போது தங்கம் வாங்கலாம் என்று நினைக்கும் போது குறைந்தும், இப்போது வாங்க வேண்டாம் என்று நினைத்தால் ஏறுவதுமாக இருப்பதால் நகை பிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தங்கம் விலை இன்னும் குறையுமா அல்லது மீண்டும் உயர்ந்துவிடுமோ என்றும் பயந்து வருகிறார்கள்.
நேற்று முன் தினம் தங்கம் விலை காலையில் அதிகரித்து இருந்த நிலையில் மாலை அதிரடியாக சரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதனால் நேற்றும் விலை குறையுமோ என எதிர்பார்த்தவர்களுக்கு தங்கம் விலை சற்று ஷாக் கொடுத்தது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ 1,07,440-க்கு விற்பனை ஆனது.
இன்றும் அதிகரித்தது தங்கம் விலை
இதனால் தங்கம் விலை இன்றும் குறையுமா அல்லது மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி அளிக்குமா என நகை பிரியர்கள் தங்கம் விலை நிலவரத்தை கூர்ந்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று சென்னையில் ரூ.230 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிகரிப்பு
தங்கம் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 15 குறைந்து ஒரு கிராம் ரூ 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. சென்னயில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கத்தில் முதலீடு அதிகரித்ததால் விலை மளமளவென உயர்ந்தது. தற்போது போரின் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை ஒரு குறைய ஒரு காரணமாக இருந்து வருகிறது.
தங்கம் விலை நிலவரம்:
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280 (இன்று)
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440 (நேற்று)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200












Click it and Unblock the Notifications