Gold Rate Today: 2 நாட்களில் தாறுமாறாக ஏறி இறங்கிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்ச் 14 ஆம் தேதி தங்கம் விலையில் இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.1440 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு சவரன் ரூ.66,400 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படும்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold price Gold

தங்கம் விலை

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை.

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த மார்ச் 13 ஆம் தேதி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதற்கு முந்தைய நாளில் 22 காரட் தங்கம் மார்ச் ஒரு கிராம் ரூ.8,065, ஒரு சவரன் ரூ.64,520 என விற்கப்பட்ட நிலையில், கிராமுக்கு ரூ.55 என சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120 ஆகவும் ஒரு சவரன் ரூ.64,960 ஆகவும் உயர்ந்தது.

தாறுமாறாக ஏற்றம்

மார்ச் 14 ஆம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. அதே நாளில் மதியம் மீண்டும் தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 1,440 உயர்ந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் நேற்று (மார்ச் 15), தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,220 ஆகவும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6775 ஆகவும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

15.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025 (பிற்பகல்) ஒரு சவரன் ரூ.66,400
14.03.2025 (காலை) ஒரு சவரன் ரூ.65,840
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025- ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+