Gold rate today: இன்றும் குறைந்தது தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்.. சென்னையில் ஒரு சவரன் ரேட் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold rate today) கடந்த வாரம் உச்சத்தை தொட்டு நகை பிரியர்களை கலங்கடித்தது. வரலாற்றில் இல்லாத விலையாக ஒரு சவரன் ரூ. 75 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆன நிலையில் அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து 7 வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரையிலான 7 மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரி விதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வந்தது.

gold price Chennai gold

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த 8 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.75,760-க்கு விற்பனையாகி நகை பிரியர்கள் தலையில் இடியை இறக்கியது. இதனால் தங்க நகைகளை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என கவலையடைந்தனர். எனின்னும் அதற்கு பிறகு தங்கம் விலையானது சற்று குறையத் தொடங்கியது.

கடந்த 9 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. இதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்து நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.

இன்றும் குறைந்தது தங்கம் விலை

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,280-க்கும், ஒரு பவுன் ரூ.74,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது 6 -வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40 குறைந்துள்ளது. இதன்படி, நேற்று ஒரு சவரன் ரூ.72,240-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.74.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் சென்னையில் இன்று ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 7 வது நாளாக குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

திருமண வீடுகள், விசேஷ நிகழ்ச்சிகள்

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆவணி மாதம் திருமண வீடுகள் விசேஷ நிகழ்ச்சிகள் நிறைய இருப்பதால் தங்கம் விலை வாங்குபவர் மத்தியில் இந்த விலை குறைவு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இதனால் விலை குறைவான நேரத்தில் வாங்கிவிடலாம் என கடந்த சில நாட்களாக நகை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை:

16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (இன்று)
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240 (நேற்று)
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+