தங்க மார்க்கெட்டில் திடீர் ’பூம்’., விலை இப்போ குறைய வாய்ப்பேயில்லை ராஜா! நிபுணர் கொடுத்த வார்னிங்!
சென்னை: கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அதிக முதலீட்டால் தங்கத்தின் விலை விரைவில் குறையலாமென சொல்லப்படுகிறது. இந்நிலையில், உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களின் மத்தியில், தங்க விலையில் பெரிய அளவிலான சரிவு ஏற்படுவது தற்போது சாத்தியம் அல்ல என்று ஜூலியஸ் பேயர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலிந்த் முசலா தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.95,000-ஐ நெருங்கியுள்ளதால், திருமணங்கள் மற்றும் பண்டிகை போன்றவற்றுக்காக தங்கம் வாங்க தயாராகி வரும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை எப்போதும் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் தங்கமும் வெள்ளியும் விலைகளில் ஏற்பட்ட கடுமையான விலை உயர்வால் முதலீட்டாளர்கள் பெருமளவில் மதிப்புள்ள உலோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கம் விலை
அதிக முதலீடு மற்றும் வாங்கும் திறன் ( over buying) காரணமாக விரைவில் தங்கத்தின் விலை சரியலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தங்க விலையில் பெரிய அளவிலான சரிவு ஏற்படுவது தற்போது சாத்தியம் அல்ல என்று ஜூலியஸ் பேயர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலிந்த் முசலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," சில நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை இடைக்கால திருத்தங்கள் நிகழ்வது இயல்பானது. ஆனால், தற்போதைய விலை உயர்வின் வேகம், சந்தையின் வலிமை ஆகியவற்றை கருத்தில் கொண்டால், பெரிய அளவிலான விலை சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.
தங்க முதலீடு
அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் நிலை, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகள் அமெரிக்க அரசுத் துறைகளிலிருந்து பணத்தை வாபஸ் பெறுவது போன்ற காரணிகள் தங்கத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளன. எனவே, தற்போது தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது அல்ல, நீண்டகாலத்தில் தங்கத்தின் மதிப்பு இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், சில நாட்கள் அல்லது வாரங்களில் சிறிய விலை சரிவுகள் நிகழ்வது சந்தையின் இயல்பானது தான்.
மிலிந்த் முசலா
இந்தியா பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பார்க்கும் போது நிதியாண்டு 2026-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சுமார் 6.5 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என RBI, உலக வங்கி, IMF ஆகியவை கணித்துள்ளன. இது நியாயமான அளவு தான். ஆனால், வரி குறைப்புகள், வட்டி விகித தளர்வுகள், உள்நாட்டு உற்பத்தி ஊக்கங்கள் போன்ற காரணிகள் செயல்பட்டால் வளர்ச்சி சற்று அதிகமாக கூட இருக்கலாம். அதேபோல, உள்நாட்டு உற்பத்தி, வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகள் மீண்டும் உயரும்.
பொருளாதார வளர்ச்சி
இந்த ஆண்டின் மழை நிலை நல்லதாக இருந்ததால் விவசாய உற்பத்தி அதிகரிக்கும். இதனால் உணவு பொருட்களின் விலை நிலைமை கட்டுக்குள் இருக்கும். மொத்தத்தில், தங்கத்தின் விலை சில சதவீதம் குறையலாம் என்றாலும், உலக பொருளாதார நிலை, டாலர் மதிப்பு வீழ்ச்சி, அரசியல் பதற்றங்கள் ஆகியவை காரணமாக தங்கம் இன்னும் பல வருடங்களுக்கு உறுதியான முதலீட்டு வாய்ப்பாகவே இருக்கும்" என்று நிதி நிபுணர் மிலிந்த் முசலா தெரிவித்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன?












Click it and Unblock the Notifications