யோசிச்சு கூட பார்க்காதீங்க.. தங்கம் விலை இனி உயர வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் நிபுணர்கள்!
சென்னை: தங்கம் விலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் மக்கள் பலரிடமும் எழுந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் தங்கம் விலை 40% உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இதுவரை 27%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஒரு குறுகிய வரம்புக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் $3,350 என்ற அளவில் விற்பனையாகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கள் விலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதேபோல் பெரிய அளவில் அதிர்ச்சி தரும் சரிவுகளும் இல்லை.

இந்தியாவில் தங்கம் விலை நிலவரம்
இந்தியாவில் இன்றைய தங்கம் விலை ரூ.97,570 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் ஒரு குறுகிய வரம்புக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது. மோதிலால் ஓஸ்வால் வெல்த் மேனேஜ்மென்ட் (MOWM) நிறுவனம், தங்கம் விலையின் ஏற்றம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது.
MOWM நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான உறவுகள் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்துள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய ஆபத்து குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், வர்த்தக ரீதியான நிச்சயமற்ற நிலையும் குறைந்து, வர்த்தக போர் முடியும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்கம் விலை இனி ஏற்றம் அடையாது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பும் அனைத்து விதிமுறைகளுக்கும் உடன்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, இந்திய வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளரும், இந்த பேச்சுவார்த்தை குழு தலைவருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழு வாஷிங்டனில் உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முக்கியமாக விவசாயம், வாகனங்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்தும் உற்பத்திப் பொருட்கள் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
குறிப்பிட்ட தொழில்துறை பொருட்கள், வாகனங்கள் - குறிப்பாக மின்சார வாகனங்கள், ஒயின், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள், பால் மற்றும் ஆப்பிள்கள், மர பொருட்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற விவசாயப் பொருட்களுக்கு அமெரிக்கா வரிச் சலுகைகளை விரும்புகிறது. ஏற்கனவே சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போரும் முடியும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
தங்கம் விலை உயராது
இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை உயராது என்று மோதிலால் ஓஸ்வால் வெல்த் மேனேஜ்மென்ட் (MOWM) நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கம் விலையின் ஏற்றம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது.
சந்தையில் சோர்வுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், தங்கம் விலை மேலும் உயர வேண்டுமென்றால், ஏதாவது பெரிய விஷயங்கள் நடக்க வேண்டும். அதாவது பொருளாதார சரிவோ, வர்த்தக போரோ, உலகப்போரோ வர வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இனி இல்லை. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றுத் தரவுகளின்படி, Comex தங்கம் ஒரு வருடத்தில் 32%க்கும் அதிகமான வருவாயை அடைந்ததில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால் தங்கம் விலை இனியும் உயரும் வாய்ப்புகள் இல்லை என்று மோதிலால் ஓஸ்வால் அறிக்கை கூறுகிறது.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications