சென்னையில் இன்னைக்கும் மழை வெளுக்கும்.. வானிலை மையம் ஜில் அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் இன்று நேற்றைப் போலவே சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் வரும் 23 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு புறம் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திடீரென மழையும் கொட்டி வெப்பத்தை தணித்து வருகிறது. மதுரை, கரூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

எனினும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் மதியம் வரை பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை கொட்டியது. தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால் நேற்று மதியமே மழை எளுத்து வாங்கியது. மாலையிலும் லேசான மழை பெய்தது. இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு பாதை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக,
சுமார் 7.6 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று 18 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு
20-07-2026 மற்றும் 21-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
22-07-2026 மற்றும் 23-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
வெயில் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை, உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி கிளைமேட்?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை / இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
18-07-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-07-2026 மற்றும் 20-07-2026: வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.21-07-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
18-07-2026: வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு- தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-07-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-07-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21-07-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
18-07-2026 முதல் 21-07-2026 வரை: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications