20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம்
சென்னை: வளைகுடா போர் காரணமாக தங்கத்தின் விலை சர்வதேச அளவில் 20% வரை சரிந்திருக்கிறது. இருப்பினும், இந்தியர்களால் இதன் முழு பலனையும் அனுபவிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தங்கத்தின் விலை கடந்த காலங்களில் பெரும் உச்சத்தை தொட்டிருந்தது. எனவே எப்போது விலை குறையும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர். இப்படி இருக்கையில், சர்வதேச அளவில் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவில் முழுமையாக 20% விலை குறைவு எதிரொலிக்காதது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

தங்கம் விலை குறைய காரணம் என்ன?
பொதுவாக போர் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்த முறை குறைந்திருக்கிறது. ஏனெனில் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், டாலர்தான் இனி எதிர்காலம் என்று நம்புகின்றனர். எனவே அதில் முதலீடு செய்கின்றனர். தங்கம் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. டிமாண்ட் இல்லாத பொருட்களின் விலை சரியும். எனவே தங்கத்தின் விலையும் வேகமாக சரிந்து வருகிறது.
டாலரின் மதிப்பு
டாலரை நம்ப காரணம், கச்சா எண்ணெய்யை வாங்கதான். கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், நாடுகள் எண்ணெயை வாங்க அதிக டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. தங்கம் டாலரில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், டாலர் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வும் பணவீக்கமும்
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலருக்கு விற்கப்படுகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க, வட்டி விகிதங்களை அமெரிக்க மத்திய வங்கி அதிகரித்திருக்கிறது. இது இன்னும் கொஞ்ச காலத்திற்கு உயர்த்திதான் வைக்கப்பட்டிருக்கும். எனவே வட்டி தராத தங்கத்தை விட, வட்டி அதிகம் கிடைக்கும் பத்திரங்கள் மீது முதலீட்டாளர்கள் பணத்தை போட தொடங்கியிருக்கிறார்கள். தங்கத்தை விற்றுதான் பணத்தை போடுகிறார்கள் என்பதால், தங்கத்தின் மதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஏன் விலை குறையவில்லை?
சரி சர்வதேச அளவில் தங்கத்தின் மதிப்பு குறைந்தாலும், இந்தியாவில் ஏன் குறையவில்லை? என்று கேள்வி எழலாம். இதற்கு காரணம் இந்திய ரூபாயின் வீழ்ச்சிதான். சர்வதேச அளவில் தங்கம் 20% சரிந்தாலும், இந்தியாவில் ரூபாய் மதிப்பு (1 டாலர் = ₹92+) வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சரிவு சுமார் 10% முதல் 15% வரை மட்டுமே பிரதிபலிக்கிறது.
தங்கம் விலை
தங்கம் சர்வதேச அளவில் டாலர் கொடுத்துதான் வாங்கப்படுகிறது. எனவே டாலர் மதிப்பு அதிகரிக்கும் போது தங்கத்தின் மதிப்பு குறையும். ஆனால், இந்தியாவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதால், அதிக பணம் கொடுத்து டாலரை வாங்க வேண்டும். பின்னர், அந்த டாலரை கொடுத்து தங்கம் வாங்க வேண்டும். இதன் காரணமாகத்தான் தங்கத்தின் விலை இந்தியாவில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை.
-
ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே மவுசு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? வாங்கி குவிக்கும் வங்கிகள் -
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?












Click it and Unblock the Notifications