Gold rate today: மீண்டும் எகிறியது.. கடந்த 5 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று ரூ.800 உயர்வு!
சென்னை: கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கமாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கம் விலை
தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் நகை விலை ஏறினாலும் நகை கடைகளில் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை ஏறுமா இறங்குமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்சய திருதியையை முன்னிட்டு நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியதுடன் விற்பனையும் அமோகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.
கடந்த சில நாட்களில்
தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 23 நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,447ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.123,576 ஆக விற்பனை செய்யப்பட்டது.
ஏப்ரல் 24 ஆம் தேதியான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 100 ஆக இருந்தது.
24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.265 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 65 ஆயிரமாகவும் இருந்தது.
இன்றைய விலை
இந்நிலையில் இன்று தங்கம் விலை ஏறுமா? இறங்குமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அப்டேட் வந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 5 உயர்ந்து, ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
25.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600 (இன்று)
24.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800 (நேற்று)
23.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,280
22.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,000
21.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400












Click it and Unblock the Notifications