ஆறுதலுக்கு சரிந்த தங்கம் விலை! இன்னைக்கு என்ன ரேட்னு பாருங்க
சென்னை: சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்கள், தங்கம் விலையில் பிரதிபலித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ஆறுதலுக்கு கொஞ்சம் குறைந்திருக்கிறது.
அதாவது, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050 என்றும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொறுத்தவரை, கிராமுக்கு வெறும் 1 ரூபாய் குறைந்து கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்கள் என்றால், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான் போர் என உலக சமாச்சாரங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதுதான் தங்கம் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்கள் நிதி சந்தையில் அச்சத்தை உருவாக்கும். எதில் முதலீடு செய்தாலும் அதிலிருந்து லாபம் வராது. போர் காலத்தில் ஆயுத விற்பனை தவிர எந்த வியாபராமும் நன்றாக ஓடாது. அதேபோல எல்லோராலும் ஆயுத விற்பனை செய்ய முடியாது.
எனவே எது பாதுகாப்பான முதலீடு என்று யோசிப்பார்கள். காலங்காலமாக அழியா, மதிப்பு குறையாது எது? நிச்சயம் அது தங்கம்தான். எனவே எல்லோரும் தங்கத்தை நோக்கி ஓடுவார்கள். டிமான்ட் அதிகமானால், அதன் மதிப்பு உயரும். அப்படித்தான் தங்கத்தின் விலையும் உயர்கிறது.
அதேபோல சர்வதேச அளவில் எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை உயரும். இப்போது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டாலரின் விலை சரிந்திருக்கிறது. டிரம்ப்பின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவு காரணமாக தங்கம் மறுமுனையில் விலை உச்சத்தை எட்ட தொடங்கியிருக்கிறது.
தங்கம் மட்டுமல்ல பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலைகளும் அதிகரித்துள்ளன. போக்குவரத்துக்கு அடிப்படை இதுதான் என்பதால் கட்டுமான பொருட்கள் தொடங்கி, டெக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என மற்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications