Gold Price: அடேங்கப்பா.. தங்கம் விலை ‘டபுள்’ மடங்கு.. வெறும் 3 வருடங்களில் தாறுமாறு உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இந்த அளவுக்கு தாறுமாறாக எகிறி நிற்கும் என சில மாதங்களுக்கு முன்பு வரை யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு இறுதியில் 57 ஆயிரம் என்ற அளவில் இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்று 80,000 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக 'டபுள் மடங்கு' ஆவதற்கு வெறும் 3 ஆண்டுகளே ஆகியுள்ளன.

இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது.

Gold Prices Doubled from 40000 to 80000 in Just 3 Years

1920ல் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 21

1920-ம் ஆண்டு ரூ.21க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று (செப்டம்பர் 6) புதிய உச்சம் தொட்டு ரூ.80,040 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,005 ஆக விற்பனை ஆனது. அந்த வகையில், தங்கம் விலை உயர்ந்து வந்த பாதையை காண்போம்.

1980 ஆம் ஆண்டில் தான் தங்கம் விலை ஒரு சவரன் முதல் முதலாக ஆயிரம் ரூபாயை தொட்டது. 2001 ஆம் ஆண்டில் தங்கம் விலை ஒரு சவரன் ரூபாய் 3,000 ஆக இருந்தது. 2006ல் தங்கம் விலை சவரன் ரூ.6000 ஆக உயர்ந்தது. 2009ல் தான் தங்கம் விலை ஒரு சவரன் ரூபாய் 10 ஆயிரத்தை எட்டியது. 2010 ஆம் ஆண்டில் தங்கம் விலை ஒரு சவரன் 15 ஆயிரத்தை தொட்டது.

2016ல் ஒரு சவரன் ரூபாய் 20,000

அதன்பிறகு, 20 ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்ட 6 ஆண்டுகள் ஆனது. 2016 ஆம் ஆண்டில் தான் தங்கம் விலை ரூபாய் 20 ஆயிரத்தை தொட்டது. 2019 ஆம் ஆண்டில் தங்கம் விலை 25 ஆயிரம் ஆனது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2020ல் தங்கம் விலை சவரன் ரூபாய் 30 ஆயிரத்தை எட்டியது.

2022 ல் தான் 40 ஆயிரத்தை தொட்டது

2021 ஆம் ஆண்டு தங்கம் விலை ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்தை தொட்டது. 2022ல் தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தை எட்டியது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் தங்கம் விலை முதல் முதலாக 40 ஆயிரத்தை எட்டியது. அடுத்த 3 ஆண்டுகளிலேயே தங்கம் விலை டாப் கியரில் எகிறி இன்றைக்கு டபுள் மடங்கு உயர்ந்து தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 ஆயிரத்தை எட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், ரூபாய் 45 ஆயிரமாக உயர்ந்தடு தங்கம் விலை. கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் 50 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை. கடந்த மே மாதம் 55 ஆயிரத்தை தொட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் முதலாக 60 ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது தங்கம் விலை. அதன்பிறகு தங்கம் விலை, சாமானியர்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எகிறியது.

இன்றைய விலை 80 ஆயிரம்

இந்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி 66 ஆயிரம் ரூபாய் ஆனது. ஏப்ரல் 12 ஆம் டேதி 70 ஆயிரமாக அதிகரித்தது. ஜூலை 23 ஆம் தேதி 75 ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி 76 ஆயிரத்தை தொட்டது. செப்டம்பர் 5 ஆம் தேதி 78 ஆயிரத்தை கடந்தது. இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூபாய் 80,000 என்ற நிலையை எட்டியுள்ளது.

3 ஆண்டுகளில் டபுள் மடங்கு

தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு மைல்கல்லையும் எட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்ளும். சில மாதங்களுக்கு முன்பு வரை நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால். இன்றைக்கு நிலையே வேறு. 3 ஆண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரமாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்றைக்கு 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடும் உயர்வுக்கு காரணம்

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், மந்தநிலை அச்சங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்களை தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாக கருதுகின்றனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை விலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்தியாவில் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் தங்கத்திற்கான கலாச்சார விருப்பம் ஆகியவை உள்நாட்டு தேவையை அதிகரிக்கின்றன. மேலும், பல நாடுகள் தங்க இருப்புக்களை அதிகரித்து வருவதும், உலகளாவிய அளவில் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+