ஆடிய ஆட்டமென்ன.. பாதாளத்துக்கு போகப் போகும் தங்கம் விலை! ஜகா வாங்கும் முதலீட்டாளர்கள்! என்னாச்சு?
சென்னை: சமீப காலமாக ஜெட் வேகத்தில் உயர்ந்து, இல்லத்தரசிகளையும் நகை பிரியர்களையும் கவலையில் ஆழ்த்திய தங்கத்தின் விலை, தற்போது திடீரென சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவது தங்கத்தின் மீது ஆசை வைத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது. பொருளாதார நிபுணர்கள் இதை ஒரு தற்காலிக நிலையாகவே பார்க்கின்றனர் என்றாலும், சிலர் இந்த சரிவு இன்னும் சில வாரங்கள் நீடிக்கக்கூடும் எனவும் கூறுகின்றனர்.
கடந்த மாதம் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஜனவரி மாதத்தில் 57,000 ஆக இருந்த தங்கத்தின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் 90 ஆயிரத்தை கடந்தது. அக்டோபர் மாதம் 18ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
அன்றைய தினம் சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று 3680 ரூபாயும், இன்று 320 ரூபாயில் குறைந்துள்ளது. இந்த நிலையில் உலகளாவிய நிதிச் சந்தையில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை
முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள சொத்துகளை நிதியாக்கும் நோக்கில் தங்கத்தை விற்கும் சூழலில் உள்ளனர். மேலும், உலகின் முக்கிய பங்குச் சந்தைகள் வரலாற்று உச்ச நிலையை எட்டியுள்ளதால், பல முதலீட்டாளர்கள் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி தங்கத்தில் இருந்து பங்குச் சந்தைக்கு தங்கள் முதலீட்டை மாற்றி வருகின்றனர். அதோடு, அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த சில வாரங்களாக வலுவடைந்து வருவதும் தங்க விலைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்க விலை குறைவு
எந்த பொருளும் குறுகிய காலத்தில் மிக வேகமாக உயர்ந்தால், அது ஒரு கட்டத்தில் சரிவு காண்பது இயல்பான பொருளாதார விதி என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதற்காகவே தங்க விலை தற்போது குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.இதுதொடர்பாக பேசியுள்ள பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன், "உலகம் முழுவதும் பலரும் தங்கத்தை பங்கு ஒப்பந்தங்களாகவும், டாலருக்கு மாற்றாகவும் வாங்கியிருந்தனர். இவர்களில் பலர் தங்கத்தை இன்னும் விற்கவில்லை.
முதலீட்டாளர்கள்
ஆனால் விலை அதிகரிப்பைக் கண்டு சிலர் இந்த உயர்வை பயன்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் விற்று விட்டு தங்க சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனை கண்டு சிறிய முதலீட்டாளர்களும் லாப நோக்கில் தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியதால், விலை தாறுமாறாகக் குறைகிறது. இது ஒரு அலை போல நகரும்; சில நாட்களில் தங்கம் மீண்டும் மிதமான உயர்வை நோக்கி நகரும் வாய்ப்பு உண்டு. ஆனால் அந்த மாற்றம் எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது," என்றார்.
பங்கு சந்தை
இந்நிலையில், அமெரிக்கா - சீனா இடையிலான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தைகள் சமரச நோக்கில் நகர்வதும், அமெரிக்க பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும், தங்கத்தின் விலையை மேலும் பாதிக்கும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலை உயரும் என்பது பொருளாதார விதி. ஆனால், தற்போதைய நிலைபடி முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து விலகி பங்குச் சந்தை நோக்கி நகர்வதால், குறுகிய காலத்திற்காவது தங்கம் விலை மேலும் குறையக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால், வரவிருக்கும் வாரங்களில் தங்க விலை எவ்வாறு மாறும் என்பது முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
-
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications