ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. தங்கம் விலை இனி இப்படித்தான் போகுமா? நிபுணர்கள் கொடுத்த ஷாக்
சென்னை: வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட தங்கம் விலை தற்போது வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்து இருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேநேரத்தில் தங்கம் விலை இதே டிரெண்டில் தொடர்ந்து சரியுமா? இல்லை விலை உயருமா? என்பது குறித்து நிபுணர்கள் கூறிய தகவல்களை பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விலை இப்படியே குறையுமா? இல்லை வரும் நாட்களில் கூட வாய்ப்புள்ளதா என்பது பற்றி வியாபாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

தங்கம் விலை பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. தங்கம் விலை நடப்பு ஆண்டு இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடும். தங்கத்தின் தேவையை போல வெள்ளியின் தேவையும் அதிகரித்தது. சமீப காலமாக தங்கத்தை போலவே, வெள்ளியில் முதலீடு அதிகரித்துள்ளது. வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைத்துள்ளது. எனவே வரும் காலங்களில் வெள்ளி விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது" என்றனர்.
முன்னதாக சர்வதேச அளவில் நிலவிய போர்சுசூழல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால், தங்கம் விலை கடந்த 14 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதன்பிறகு தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்து வருகிறது.
நேற்று கிராமுக்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.55 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,930க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்
29.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440(இன்று)
28.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440(நேற்று)
27.06.2025 - ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications