தலைகால் புரியாமல் ஆடிய தங்கம்.. சீன டிராகன் செய்த சைலண்ட் சம்பவம்! இன்னும் விலை குறையுமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச தங்க சந்தையில் கடந்த சில நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை, திங்கள்கிழமை திடீரென சரிவை சந்திந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடைபெறக்கூடும் என்ற நம்பிக்கையும், தங்க விலை குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்கின்றனர் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்கள் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஜனவரி மாதத்தில் 57,000 ஆக இருந்த தங்கத்தின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் 96 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

அன்றைய தினம் சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், அடுத்தடுத்து விலை குறைந்து நேற்று வரை 92 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இன்றும், சவரனுக்கு சுமார் 400 ரூபாய் குறைந்துள்ளது. உலகளாவிய நிதிச் சந்தையில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூற்கின்றனர்.

தங்கம் விலை சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடைபெறக்கூடும் என்ற நம்பிக்கையும், தங்க விலை குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி," திங்கள்கிழமை காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.7 சதவீதம் குறைந்து 4,082.77 அமெரிக்க டாலராக பதிவானது. அதே நேரத்தில் டிசம்பர் மாதத்திற்கான தங்க வர்த்தக விலை 1 சதவீதம் சரிந்து 4,095.80 டாலராக இருந்தது.

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலர், மற்றும் சீன யென்னுக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு வலுவாகியுள்ளது. இதனால் பிற நாணயங்களில் தங்கம் வாங்கும் நாடுகளுக்கு விலை உயர்ந்ததாகத் தோன்றியுள்ளது. இதுவும் தங்க விலையைச் சற்றே குறைக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட பொருளாதார அதிகாரிகள் இரு நாடுகளின் தலைவர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீ ஜின்பிங் முடிவெடுக்கக்கூடிய புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவு குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த செய்தி உலக பங்குச் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தி, தங்கத்தில் இருந்த பாதுகாப்பு முதலீட்டு தேவை குறைந்துள்ளது.

அமெரிக்கா சீனா வர்த்தகம்

Capital.com நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் கைல் ரொட்டா கூறும் போது, "அமெரிக்கா-சீனா இடையிலான ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை எதிர்பாராத அளவுக்கு முன்னேறியிருப்பது சந்தைகளுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், அது தங்கத்திற்கு பாதகமாகியுள்ளது. இருந்தபோதும், உலகளவில் தளர்வான பணவியல் கொள்கைகள் தொடர்ந்தால், தங்கத்தின் நீண்டகால உயர்வு நிலை நீடிக்கும்" என்றார்.

வட்டி விகிதம்

அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வரும் புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பணவீக்க அறிக்கையும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. பொதுவாக, வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பானதாக மாறும். உலகின் மிகப்பெரிய தங்க ஆதரவு நிதியான SPDR Gold Trust நிறுவனம் தனது தங்க கையிருப்பை 1,052.37 மெட்ரிக் டனிலிருந்து 1,046.93 டனாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 0.52 சதவீத குறைவாகும்.

Gold Price china trade

பொருளாதார நிலை

இதேவேளை, வெள்ளி விலை 0.3 சதவீதம் குறைந்து 48.42 டாலராகவும், பிளாட்டினம் 0.1 சதவீதம் உயர்ந்து 1,607.24 டாலராகவும், பலேடியம் 0.2 சதவீதம் குறைந்து 1,426.06 டாலராகவும் இருந்தது. கடந்த சில நாட்களாக உலக சந்தையில் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் டாலர் மதிப்பு அதிகரித்ததும், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து வந்த நல்ல செய்திகளும் சேர்ந்து, தங்க விலை தற்போது சற்றே குறைந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள், இந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி அறிவிக்கவுள்ள வட்டி விகித மாற்றமே தங்கத்தின் அடுத்த நகர்வை தீர்மானிக்கும் எனக் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+