Gold rate today: நகை பிரியர்களுக்கு மேலும் ஷாக்.. ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold rate today) தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புது உச்சம் தொடும் தங்கம் விலையால் நகைபிரியர்கள் கலக்கம் அடைந்து வருகின்றனர். நேற்று காலையில் தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில், மாலையில் மீண்டும் அதிகரித்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.87,200-க்கும் விற்பனை ஆனது. இன்று விலை குறையுமா என நகைபிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்திலும் தொடக்கத்தில் இருந்து விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது.

உச்சம் தொடும் தங்கம் விலை
தினம் தினம் அதிர வைத்து வரும் தங்கம் விலை இன்றாவது குறைய வாய்ப்பு உள்ளதா என நகைபிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையே தங்க நகைபிரியர்களை கலக்கம் அடைய வைத்த நிலையில், இந்த ஆண்டு தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றால் தங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளது. தங்கம் விலை கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர இது முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது முதலீடாகவும் அணிகலனாகவும் வாங்கப்படுவதால், தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாகவே உள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் நகை வாங்க பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களுக்கு தினந்தோறும் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்திலிருந்து விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
நேற்று ரூ.87,200-க்கு விற்பனை
அதிலும் ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது. நேற்றும் காலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் குறைந்து, மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது. மொத்தத்தில், கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10,900-க்கும், ஒரு சவரன் ரூ.87,200-க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை நேற்று குறைந்து இருந்தது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-மும் குறைந்து, ஒரு கிராம் ரூ.162-க்கும், ஒரு கிலோ ரூ.1,62,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றாவது குறைய வாய்ப்பு உள்ளதா? நகை வாங்கலாமா என நகைபிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.
இன்றைய தங்கம் ரேட் என்ன?
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.400 அதிகரித்து உள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.87,600-க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக இன்று புது உச்சம் தொட்டு உள்ளது. இன்று மட்டும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி சென்னையில் இன்று ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறடு.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
04.10.2025- ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025- ஒரு சவரன் ரூ. 86,880












Click it and Unblock the Notifications