Gold Price today: ஏறிய வேகத்தில் அப்படியே இறங்கிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் சற்று நிம்மதி.. ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold Price) நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. நேற்று காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கம் விலை அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலையில் குறைந்து சர்ப்ரைஸ் தந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,280 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் புதிய உச்சம் தொட்டது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஒரே நாளில் காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுத்து வந்தது.

ஒரு லட்சத்தை தொட்டுவிடுமோ என அச்சம்
இதனால் இனி தங்க நகைகளை கனவில் தான் வாங்க முடியுமோ என கவலை கொள்ளும் அளவுக்கு தினம் தினம் தங்கம் விலையானது உச்சத்தை நோக்கி சென்றது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.97,600 வரை சென்றது. இனி கொஞ்ச நாளில் எப்படியும் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொட்டு விடும் என பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
எப்போது தான் விலை குறையுமோ என ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு சற்று நிம்மதி தரும் வகையில் கடந்த ஒரு மாதமாகவே அதாவது அக்டோபர் 20 ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை சற்று குறைய ஆரம்பித்தது. ஒரே அடியாக குறையவில்லை என்றாலும் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஒரு கிராம் ரூ.11,250 என்ற அளவுக்கு குறைந்தது.
தங்கம் விலை தடாலடி உயர்வு
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன் தினமும் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. நேற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.2400 அதிகரித்தது.
சென்னையில் நேற்று காலையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.11,800க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.1600 ரூபாய் உயர்ந்து ரூ.94,400க்கு விற்பனையானது. இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மாலையிலும் தங்கம் விலை அதிகரித்தது.
இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை
காலையில் சவரனுக்கு ரூ.1600 அதிகரித்த நிலையில் மாலையில் ரூ.800 அதிகரித்தது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,900-க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை மீண்டும் 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை பிரியர்களை கலக்கமடைய வைத்திருக்கிறது.
இதனால் இன்று விலை எவ்வளவு கூடுமோ என அதிர்ச்சியுடன் காத்திருந்த நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது தங்கம் விலை. ஆம், இன்று காலையில் சவரனுக்கு ரூ.480 குறைந்தது. இதனால் மீண்டும் தங்கம் விலையானது ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.
மாலையிலும் தங்கம் விலை சரிவு
அதாவது இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.11,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.480 குறைந்து ரூ.94,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.
இதனால் இன்று ஒரே நாளில் காலை மாலை என மொத்தம் சவரனுக்கு ரூ.1280 குறைந்து ரூ.93,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்து ரூ.11,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்தது
தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் கடந்த இரு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.183-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.3 குறைந்து ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாலையிலும் இதே விலை நீடிக்கிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920 ( இன்று மாலை)
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720 (இன்று காலை)
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200 (நேற்று)
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications