Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. 4வது நாளாக எகிறிய ‛ரேட்’.. ஒரு சவரன் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இதனால் இன்று தங்கம் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏனென்றால் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.73 ஆயிரத்தை கடந்துள்ளது.

தங்கம்.. நம் நாட்டு மக்களிடம் எப்போதும் மவுசு குறையாத ஆபரணமாக உள்ளது. எவ்வளவு தான் விலை உயர்ந்தாலும் கூட மக்கள் தங்கம் வாங்குவதை விடவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மக்கள் அதிகம் வாங்கி குவிக்கும் ஆபரணங்களில் தங்கம் தான் முதன்மையாக உள்ளது.

is-gold-price-drop-today-after-3-days

இந்த தங்கத்தின் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் மற்றும் பல நாடுகள் இடையேயான மோதல் பதற்றம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.72 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று சவரனுக்கு ரூ.80 ரூபாய் உயர்ந்து ரூ.72,720க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.9,090-க்கு விற்பனையானது. இதன்மூலம் சென்னையில் கடந்த 3 நாட்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தான் இன்று தங்கம் விலை குறையுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனென்றால் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.73,040க்கு விற்பனையாகிறது. அதேபோல் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.9, 130க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை உயர்வால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

05.06.2025 - ஒரு சவரன் ரூ.73,040

04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720

03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160
***

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+