Gold rate today: இன்றும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. ஹேப்பியில் நகை பிரியர்கள்.. ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: கடந்த 8 ஆம் தேதி அன்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக உச்சம் தொட்ட தங்கம் விலை (Gold rate today) அதற்கு பிறகு தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ச்சியாக சரிந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது ஆவணி மாதம் பிறந்துள்ளதால் நகை வாங்குவதற்கு பலரும் பிளான் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. கடந்த 8 ஆம் தேதி இந்த விலை உயர்வை எட்டியது. தங்கம் வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச விலை உயர்வு இதுவாகவே இருந்தது.

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச அளவில் டிரம்ப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையானது கிடுகிடுவென உயர்ந்தது. நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் ரூபாய் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. ஆடி முடிந்து ஆவணி வந்தால் டாப் ஆக வருவான் என்று சொல்வது போல பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உச்சத்தை தொட்டு விடுமோ என நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இன்றைய ரேட் என்ன?
கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை மாறவில்லை. தங்கம் ஒரு கிராம் ரூ.9,275 என்ற விலைக்கும், ஒரு சவரன் ரூ. 74,200 ஆக விற்பனையாகிறது. இந்த விலை மேலும் குறையுமா என்று தங்க நகை பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.9,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 320 குறைந்து ரூ.73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.126 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை:
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (நேற்று)
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240.












Click it and Unblock the Notifications