Gold rate today: காலை + மாலை.. மாறி மாறி உயரும் தங்கம் விலை.. குறையவே குறையாது போல! இன்றைய ரேட் தான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த 10 நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினமும் புது ரெக்கார்டு படைக்கும் வகையில் விலையானது உயர்ந்து வருகிறது. நேற்றும் காலை மாலை என இருவேளைகளிலும் என சவரனுக்கு ரூ.1,480 விலை உயர்ந்தது. இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. காலையில் மட்டும் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ள நிலையில் மாலையில் மேலும் ரூ.200 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை தினம் தோறும் உச்சம் தொட்டு நகை பிரியர்களை கதி கலங்க வைத்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் தங்கம் விலையானது உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

gold price Chennai gold

தங்கம் விலை

இந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை ரூ.33 ஆயிரம் அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காமல் ஏறி வரும் தங்கம் விலை எப்போதுதான் குறையும் என நகை பிரியர்கள் கலக்கத்துடன் உள்ளனர். தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச அளவிலான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணையிக்கப்படுகிறது.

நேற்று எவ்வளவு கூடியது

தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களை கதி கலங்க வைத்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று இரண்டு முறை உயர்ந்தது. சவரனுக்கு 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,080 ஆக விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமிற்கு 185 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது.

காலையில் ரூ.800 ம், மாலையில் ரூ.680 ம் உயர்ந்துள்ளது. இப்படி ஜெட் வேகத்தில் தங்கம் விலை சென்று வருவதை பார்த்த நகை பிரியர்கள் இந்த மாதத்திலேயே தங்கம் விலை ஒரு லட்சம் எட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனவும் இனி தங்கத்தை கனவில் தான் வாங்க முடியும் போல பேசும் அளவிற்கு தங்கம் விலையானது உயர்ந்து வருகிறது.

3 நாட்களில் 3,500 உயர்வு

சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துவருவதே விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,480 உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, லாபகராமனாது என கருதி பலரும் தங்கத்தை வாங்கி குவிப்பதும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இன்றைய தங்கம் விலை என்னவாக இருக்கும்? இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விலை குறைய வாய்ப்பு உள்ளதா? என நகை பிரியர்கள் திக் திக் மனநிலையுடன் காத்திருந்த நிலையில் இன்றும் அதிகரித்து உள்ளது.

இன்றும் அதிகரித்தது

நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து உள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மாலையிலும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை

தொடர்ந்து மாலையிலும் தங்கம் விலை அதிகரித்தது. காலையில் ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ரூ.200 அதிகரித்தது. இதனால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை மாலை என மொத்தம் ரூ.40 அதிகரித்து ரூ.11,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று மீண்டும் புது உச்சம் தொட்டுள்ளது. காலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து இருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.177-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை, மாலை என மாறி மாறி இருவேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால் நகைபிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (இன்று மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (இன்று மாலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (நேற்று பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (நேற்று காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600 (நேற்று)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று காலை)
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+