ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே வாழ்வு வரும் போது..தங்கத்துக்கு வராதா! டாப் கியரில் எகிறும் ரேட்!
சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் குறையலாம் என்ற நம்பிக்கை காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. காலை நேரத்தில் கடுமையாக சரிந்திருந்த தங்கம், பின்னர் மீண்டும் உயர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
கடந்த சில நாட்களாகவே ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வந்தது. நேற்றும் ஒரு அவுன்ஸ் ( 31.1035 கிராம்) தங்கத்தின் விலை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் கணிசமாக குறைந்து சரிவைத் தொட்டது.

ஆனால், ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு புதிய முன்மொழிவு வந்ததாக தகவல்கள் வெளியாகியதும் சந்தையில் நம்பிக்கை உருவானது. இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை வாங்கத் தொடங்கினர். அதன் விளைவாக, நாள் முடிவில் தங்கம் விலை சிறிய அளவில் உயர்ந்தது.
தங்கம் விலை
இருப்பினும், வார அளவில் பார்க்கும்போது தங்கம் இன்னும் சரிவிலேயே உள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் எண்ணெய் விலை. ஈரான் பிரச்சினை காரணமாக எண்ணெய் விலை கடந்த நாட்களில் உயர்ந்திருந்தது. எண்ணெய் விலை அதிகரித்தால் பணவீக்கம் கூடும் என்ற அச்சம் உருவாகிறது. இதனால் வட்டி விகிதங்கள் உயர்ந்தே நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. இந்த சூழலில் தங்கம் போன்ற வருமானம் தராத முதலீடுகளின் கவர்ச்சி குறையும்.
ஈரான் - அமெரிக்கா
ஆனால், தற்போது ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை சற்றே குறைந்துள்ளது. இதுவே தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலர் மதிப்பும் சற்று குறைந்ததால், பிற நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தங்கம் மலிவாக கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதுவும் தங்க விலையை உயர்த்த உதவியுள்ளது.
பாதுகாப்பான முதலீடு
அதே நேரத்தில், அமெரிக்க மத்திய வங்கி எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு தங்க விலைக்கு பெரிய தடையாக உள்ளது. வட்டி விகிதங்களை உடனடியாக குறைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், முதலீட்டாளர்கள் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனர். அதிக வட்டி விகிதம் இருக்கும் போது தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் குறையும் என்பது சந்தை நிபுணர்கள் கூறும் கருத்தாகும். இந்த நிலையில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்றாலும், தற்போதைய சூழலில் அது தொடர்ந்து உயர்வை காணவில்லை. குறிப்பாக, ஈரான் பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து தங்க விலை மொத்தத்தில் குறைந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
இதற்கிடையில், வெள்ளி விலை மட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொழில்துறை தேவைகள் மற்றும் எதிர்கால தேவைகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வெள்ளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. சூரிய ஆற்றல் உற்பத்தி போன்ற துறைகளில் வெள்ளிக்கு அதிக தேவை இருப்பது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் நிலைமை, எண்ணெய் விலை, வட்டி விகிதங்கள் ஆகிய மூன்று முக்கிய காரணிகள் தற்போது தங்க சந்தையை தீர்மானித்து வருகின்றன. ஈரான் பிரச்சினையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் தங்க விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications