Today Gold Rate: வாரத்தின் முதல் நாளே ஷாக்.. மீண்டும் ஏறத்தொடங்கிய தங்கம் விலை! இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கத்தின் விலை கடந்த 2 மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கம் விலையால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 50 அதிகரித்து ரூ.7940க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.400 அதிகரித்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தங்க நகை மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது. குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள். இதனால், தங்கத்தின் விலை உயர்வு என்பது நாட்டில் வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒன்றாக உள்ளது.

டொனால்டு டிரம்பின் நடவடிக்கை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், வர்த்தகப் போர் அபாயம் ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கூட ஓரிரு நாட்களில் விலை குறையும் என காத்திருந்தால் தொடர்ந்து விலையேறி ஷாக் கொடுத்து வருகிறது.
தொடர்ந்து அதிகரித்தாலும் கூட இடையிடையே சில நாட்கள் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சியயும் கொடுத்து வருகிறது. ஆனாலும் விலை கூடும் போது அதிரடியாக கூடுகிறது. ஆனால் குறையும் போது சில நூறுகளிலே குறைவது நகை பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக கூடி வந்த நிலையில் நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது. கடந்த 13 ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ. 63,840-க்கு விற்பனையானது.
உயரும் தங்கம் விலை
கடந்த 14 ஆம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,920-க்கும் ஒரு கிராம் ரூ.7990-க்கும் விற்பனையானது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது. கிராமுக்கு நூறு ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,890க்கு விற்பனையானது.. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.63,120க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று எந்த விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7890க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.63.120க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 108 க்கு விற்பனையானது. தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலை குறையுமா என்று நகைபிரியர்கள் காத்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை எவ்வளவு
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7940க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 இன்று உயர்ந்தது. இதனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம்மின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை:
17.02.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025 (நேற்று) - ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்).
-
தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
RBI: தங்கம் கொள்முதலை திடீரென பாதியாக குறைத்த ரிசர்வ் வங்கி.. என்ன காரணம்? -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications