தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் குறைந்த நிலையை ஒப்பிடுகையில் திடீரென 17,000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து முதலீட்டாளர்களின் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்திய உலக அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார காரணிகளால் தங்க சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், "இப்போது தங்கம் வாங்கலாமா?" என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.

இந்திய சந்தையில் எம்சிஎக்ஸ் (Multi Commodity Exchange of India (MCX) தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் 10 கிராமுக்கு ரூபாய் 1,47,270 ஆக முடிவடைந்தது. வாரத்தின் தொடக்கத்தில் ரூபாய் 1,29,595 என்ற குறைந்த நிலையை எட்டிய நிலையில், அதிலிருந்து ரூபாய் 17,500-க்கும் மேல் மீண்டும் உயர்ந்துள்ளது.

Gold price Gold India

இது குறுகிய காலத்தில் ஏற்பட்ட பெரிய எழுச்சியாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையிலும் தங்க விலை உயர்வும் சரிவும் மாறி மாறி காணப்படுகிறது. காமெக்ஸ் தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்சுக்கு 4,500 டாலரைக் கடந்த நிலையில் இருந்தாலும், மொத்த வார கணக்கில் சுமார் 1.85% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தங்க விலை நிலைமையை பாதிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று மேற்காசியப் பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம். குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் சில நேரங்களில் பணமாக மாற்றிக்கொள்ள தங்கத்தை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்க விலை சில சமயங்களில் திடீர் சரிவை சந்தித்தது.

அதே நேரத்தில், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை வாங்கும் பழக்கம் இருப்பதால் மீண்டும் விலை உயர்வதும் வழக்கமாக உள்ளது. மேலும், அமெரிக்க அரசுத் தரப்பு பத்திரங்களின் (US Treasury) வருமான விகிதம் உயர்வதும் தங்க விலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டி வருமானம் தராத சொத்தாக தங்கம் இருப்பதால், அதிக வட்டி தரும் முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மாறும் சூழல் உருவாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு காரணமாக உள்ளது. சமீபத்தில் ஒரு பேரலுக்கு 120 டாலர் வரை உயர்ந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பின்னர் 93 டாலர் அளவுக்கு குறைந்தது. இந்த விலை சரிவு பணவீக்க அச்சத்தை குறைத்து, தங்க விலையை மீண்டும் உயர்த்த உதவியதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், உலக மத்திய வங்கிகள் கடுமையான நிதி கொள்கையை பின்பற்றுவது தங்க விலையை கட்டுப்படுத்தும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் உயர்வதால் தங்கத்தின் ஈர்ப்பு சில அளவில் குறைகிறது.

சந்தை நிபுணர்களின் மதிப்பீட்டுப்படி, சர்வதேச சந்தையில் தங்க விலை 4,600 டாலரை தாண்டி நிலை பெற்றால், 4,680 டாலர் முதல் 4,750 டாலர் வரை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு 4,850 டாலர் வரை கூட செல்லும் வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுபுறம், 4,300 டாலருக்கு கீழ் சரிந்தால், 4,100 டாலர் முதல் 4,150 டாலர் வரை மேலும் சரிவை சந்திக்கும் அபாயமும் உள்ளது. இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்திற்கு 1,40,000 ரூபாய் எனபது முக்கிய ஆதார விலையாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, தங்க விலை குறுகிய காலத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உலக அரசியல் சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் வலிமை மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்றவை தங்க விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. விலை குறையும் நேரங்களில் படிப்படியாக வாங்குவது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும். ஒரே நேரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்த்து, விலை சரிவுகளை பயன்படுத்தி சிறு அளவில் வாங்குவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+