Janaki: ஒரே பையன் போயிட்டானே.. மகன் மறைவால் உடைந்த ஜானகி.. சில மாதங்களிலேயே வந்த பேரதிர்ச்சி
சென்னை : ஆயிரக்கணக்கான பாடல்களில் காதல், தாய்மை, பிரிவு, வலி என அத்தனை உணர்வுகளையும் தன்னுடைய குரலில் காட்டி ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ் ஜானகி. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு இழப்பு அந்த இசை அரசியை மொத்தமாக உடைத்து போட்டு விட்டது. தனது ஒரே மகனான முரளி கிருஷ்ணா இழந்த ஜானகி அந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது அவரது மறைவு செய்தியும் இசை ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறது.
சினிமாவை விட்டு விலகிய ஜானகி
சில வருடங்களாகவே ஜானகி சினிமாக்களில் பாடுவதை நிறுத்திவிட்டார். இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் நான் என்னுடைய வேலைகளில் நிறைவாக செய்து இருக்கிறேன் அந்த திருப்தியே எனக்கு போதும். இளம் தலைமுறைகளும் வெற்றி பெறுவதை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதனால் தான் நான் பாடுவதை நிறுத்திவிட்டேன் என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
பாடகி ஜானகியின் மகன் இறப்பு
அதுபோல ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா சினிமாவில் பெரிதாக ஜெயிக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் கடைந்த ஜனவரி 22 ஆம் தேதி முரளி கிருஷ்ணா உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மைசூரில் காலமானார்.

ஒரு அம்மாவுக்கு எத்தனை வயது ஆனாலும் தன்னுடைய மகன் தானே எல்லாம்... பல கோடி ரசிகர்களுக்கு ஜானகி அம்மாவாக இருந்தாலும் அவருக்கு முரளி கிருஷ்ணா மட்டும்தான் ஒரே மகன். அந்த இழப்பு எந்த அளவிற்கு அவரை பாதிக்கத்திற்கும் என்பதை வார்த்தைகளில் சொல்ல வேண்டியதே இல்லை.
முரளி கிருஷ்ணா மறைந்த நேரத்தில் ஜானகி உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் பரவின. இதனால் வேதனை அடைந்த அவரது பேத்தி அப்சரா பாட்டியின் உடல்நிலை நல்லபடியாக தான் இருக்கிறது. என்னுடைய அப்பாவின் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனாலும் மகனை இழந்த இழப்பிலிருந்து மீண்டு வராத ஜானகியை இன்று காலமாகிவிட்டார்.
மகனை இழந்த வலி
தன்னுடைய கணவரை இழந்த பிறகு மகன், பேத்தி என தனது குடும்பத்துடன் வாழ்க்கையை தொடர்ந்து வந்த ஜானகியின் இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் திரை ரசிகர்களையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. ஜானகியின் குரலை கேட்டு எத்தனையோ பேர் அழுது இருக்கிறார்கள். ஆனால் கடைசி காலத்தில் அந்த தாயின் மனதையே மகனின் பிரிவு உடைத்து விட்டது. முரளி கிருஷ்ணா சென்ற சில மாதங்களிலே அவருடைய அம்மாவும் விடை பெற்று இருப்பது ரசிகர்களால் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாத சோகம்.














Click it and Unblock the Notifications