Janaki : பாடகி ஜானகி இவ்வளவு நல்லவங்களா? சினிமாவை விட்டு விலக காரணம்! இவருக்கா இந்த நிலைமை? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: இந்திய திரையிசை வரலாற்றில் எத்தனை குரல்கள் வந்தாலும், சில குரல்கள் காலம் கடந்தும் மனதை விட்டு போகாது. அந்த வரிசையில் முதன்மையாக நினைவுக்கு வருபவர் - தென்னிந்திய நைட்டிங்கேல் எஸ். ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, பல தலைமுறைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியவர்.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஜானகியின் குரல் சினிமாவில் கேட்கவில்லை."ஏன் ஜானகி அம்மா இனிமேல் பாடுவதில்லை?" என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட காலமாக இருந்துகொண்டே தான் இருக்கிறது.

சினிமாவை விட்டு விலகிய காரணம்
பலரும் அறியாத உண்மை என்னவென்றால், "என் குரல் எனக்குப் பிடிக்காத நாளில் நான் பாடமாட்டேன்" என்பதே ஜானகி எடுத்த உறுதியான முடிவு.
வயது காரணமாக குரலில் இயல்பான மாற்றங்கள் வரும் என்பதை அவர் மிக நேர்மையாக ஏற்றுக்கொண்டார். இளைய பாடகர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும், இசைத்துறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானாகவே சினிமாவிலிருந்து ஒரு மரியாதையான விலகலை அவரே தேர்வு செய்தார். அவருக்கு பாடுவதற்காக எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அதை மறுத்து வருகிறார்.
அதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக அவர் மேடை நிகழ்ச்சிகளிலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுநிகழ்ச்சிகளிலும் மட்டுமே தோன்றினார். சினிமா பாடல்களில் இருந்து மட்டும் விலகி இருந்தார்.
எத்தனை காலத்திற்கு தான் நாமே பாடி கொண்டிருக்க வேண்டும்.. எனக்கு வரும் வாய்ப்பை நான் முடியாது என்றால் மற்ற இளைஞர்களுக்கு போகும், அப்போதுதான் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும் என்று ஒரு பேட்டியில் ஜானகி விளக்கம் கொடுத்திருந்தார்.

வாழ்க்கையை உலுக்கிய பேரிழப்பு
இந்த அமைதியான ஓய்வு காலத்தில், இன்று ஜானகியின் வாழ்க்கையில் ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருடைய மகன் முரளி கிருஷ்ணா உடல்நலக் குறைபாடு காரணமாக காலமானார் என்ற செய்தி, இசை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1997ஆம் ஆண்டில் கணவரை இழந்த ஜானகிக்கு, வாழ்க்கையில் எல்லாமே மகன் தான். தாய்-மகன் உறவின் அடையாளமாகவே அவர் வாழ்ந்து வந்தார். அந்த மகனையே இழந்துவிட்டார் என்ற செய்தி, 87 வயதில் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்கள், "இந்த வயதில் ஜானகி அம்மாவுக்கு இப்படி ஒரு சோகம் வர வேண்டுமா?" என்று மனம் நொந்து பேசுகிறார்கள்.
இன்று ஜானகி அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் போதாது. இருந்தாலும், ரசிகர்களும் இசை உலகமும் ஒரே விஷயத்தை மனதார விரும்புகின்றன.
இந்த துயரத்திலிருந்து அவர் மீண்டு வர வேண்டும். அவர் வாழ்ந்த வாழ்க்கையும், அவர் தந்த இசையும் இன்றைய இளையவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். வாழ்க்கை எவ்வளவு சோதனைகள் கொடுத்தாலும், மனிதன் தளராமல் முன்னே செல்ல வேண்டும் என்பதற்கான உதாரணமாக அவர் மீண்டும் உறுதியுடன் நிற்க வேண்டும்.
ஒரு காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை தனது குரலால் தாங்கிய ஜானகி, இன்று தனது துயரத்தைத் தானே தாங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
ஜானகி அம்மா - உங்கள் குரல் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையும் எங்களுக்கு ஒரு பாடம். இந்த துயரத்தையும் நீங்கள் கடந்து வருவீர்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உறுதியாக இருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications