சண்டே ஸ்பெஷல்! 5 மாவட்டங்களை குளிர்விக்கப்போகும் மழை! என்ஜாய் பண்ணுங்க மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை ஓரளவுக்கு பெய்து வருகிறது. குறிப்பாக வெயில் வாட்டி எடுத்த வேலூர் மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், இன்று நீலகிரி கோயம்புத்தூர், திண்டுக்கல் தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications