வாடி வாடி வாடி.. கைப்படாத சீடி.. குத்தாட்டம் போட்ட உயர் கல்வி அமைச்சர்.. தரமான அரசியல் மீம்ஸ்!
சென்னை: பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வாடி வாடி கைப்படாத சிடி பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ டிரெண்டாகி இருக்கிறது. அதேபோல் சட்டசபையில் முதல்வர் விஜய்யின் மவுனம் தொடர்பாகவும் மக்களிடையே விவாதம் நடந்து வருகிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

விஜய்யின் வாடி வாடி வாடி கைப்படாத சிடி பாடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த செய்தியை பகிர்ந்து ஒருவர், கூட ஆடுறவனுக்கே யாரு அமைச்சர்னு தெரியாது இதுல.. ராஜா ராணில திருடன கண்டுபிடிக்கிற மாரி ரெண்டு மூனு கெஸ் போனா தான் தெரியும் என்று சொல்லி இருக்கும் கருத்து கொஞ்சம் உண்மைதான் ரகம்.

சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் முதல்வர் விஜய்யின் அமைதியை கிண்டல் செய்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. சார்பட்ட பரம்பரை படத்தில் ஆர்யா, "என்னடா வாத்தியார எல்லாரும் பல்லுபிடிச்சு பார்க்கிறீங்களா.. டேய் வேம்புலி உன்னை நான் அடிச்சு தூக்குறேன்டா" என்பார். அதனை அப்படியே விஜய்க்கு மாற்றி, "என்னங்கயா.. ஆளு ஆளுக்கு எங்க அண்ணாவை பல்லு பிடிச்சு பார்க்கிறீங்களா.. எங்க அண்ணன் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு வந்தா நீங்கலாம் காலிடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஸ்கிரிப்ட் இல்லனா டம்மி தான் போல.

சட்டசபையில் முதல்வர் விஜய் அனைவரும் பேசும் வார்த்தைகளை கேட்டு கொண்டு, அப்படியே அமைதியாக மேலே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார். அதனை அப்படியே மாற்றி, "நானும் இப்படிதான் மாமியார் வீட்டில் உட்கார்ந்து இருப்பேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

தாய்க்கிழவி படத்தில் ஆத்தாவுக்கு ஒன்னும் ஆகாது.. சம்பளத்துக்கு ஆள் போட்டுட்டேன் என்று பால சரவணன் சொல்வார். அதில் வரும் பால சரவணனாக ஆதவ் அர்ஜுனாவையும், சிங்கம் புலியாக விஜய்யையும் மாற்றி, இனிமே நம்மாளுங்க யாரும் முட்டுக் கொடுக்க வேண்டாம்.. சம்பளத்துக்கு ஆள் போட்டுட்டேன் என்று விசிகவை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அநியாயத்திற்கு கலாக்காதீங்கப்பா ரகம்.

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் மாப்பிள்ளைக்கு மேக் அப் போட்டு வடிவேலு மற்றும் முரளி இருவரும் அழைத்து வருவார்கள். அதில் வரும் மாப்பிள்ளையாக விஜய்யையும், முரளியாக ஆதவ் அர்ஜுனாவையும், வடிவேலுவாக புஸ்ஸி ஆனந்தையும் மாற்றி, நெசமாகவே சொன்ன மாதிரி இட்னு வந்து இட்னு போய்ட்டு இருக்கானுங்க என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சூட்சமத்தை கண்டுபிடிச்சுட்டாங்களே ரகம்.












Click it and Unblock the Notifications