மந்திரக் குரலால்.. தலைமுறைகள் தாண்டி ரசிகர்களின் இதயங்களை வென்ற பின்னணிப் பாடகி ஜானகி காலமானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (வயது 88) இன்று காலமானார். தனது மந்திர குரலால் கோடிக்கணக்கான மனங்களை வசப்படுத்தியிருந்த அவர், இன்று காலமானார்.

ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

S Janaki

மைசூரில் ஜானகி வசித்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

யார் இந்த ஜானகி?

இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். 1938ம் ஆண்டு ஆந்திராவின் பல்லேபட்லா கிராமத்தில் ஏப்ரல் 23 அன்று பிறந்தார். 19 வயதிலேயே இவர் சினிமா துறைக்குள் நுழைந்துவிட்டார். 1957ல் வெளியான 'விதியின் விளையாட்டு' என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகி என்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இதுபோக மாநில அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார். நீண்ட காலமாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது காலமானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+