கோடிக்கணக்கான மனங்களை.. இனிமையான குரலால் கட்டிப்போட்டது எப்படி? ஜானகியின் பலம் இதுதான்!
சென்னை: புகழ்பெற்ற, பழம்பெரும் பின்னணி இசை பாடகி ஜானகி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், ஜானகியின் பலம் குறித்து இசையமைப்பாளர் கூறிய கருத்துக்கள் கவனம் பெற்று வருக்கின்றன.
பாடுவது என்பது கலை! எல்லா மொழியிலும் பாடுவது என்பது கலையின் மீதான காதலால்தான் சாத்தியமாகும். ஜானகிக்கு அந்த காதல் இருந்தது என்கிறார்கள் அவருடன் பயணித்த இசையமைப்பாளர்கள்.

ஜானகியின் பலம்
ஜானகி அடிப்படையில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்தான். ஆனால், தமிழிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் அவரால் சரியான உச்சரிப்பை கொடுத்து பாட முடியும். அவரது பாடலை மலையாளி கேட்டால், மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் இதை பாடினார் என்று அடித்து சொல்வார். நாம் கேட்கும்போது.. செந்தமிழில் கை தேர்தவர்தான் ஜானகி என்று சொல்வோம். இப்படியாக பாடலுக்கு உயிர் கொடுக்கக்கூடியவர்தான் அவர்.
எந்த பாடலுக்கு எந்த குரலை பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். இதுதான் அவரிடமிருந்த தனி சிறப்பு. அவரால் சிறுமியின் குரலில் பாட முடியும். இளம்பெண் குரலிலும்.. முதிர்ந்த பெண்ணின் குரலிலும் பாடும் வல்லமையை கொண்டிருந்தார் என்கிறார் மலையாள இசையமைப்பாளர் ஷியாம்.
தமிலும் இளையராஜா, எஸ்பிபி, ஏஆர்.ரஹ்மான் என பலரும் ஜானகியின் குரல் வளத்தை வியந்து பாராட்டியிருக்கின்றனர். ஜானிகியுன் பயணித்தது இசை பயணம் கிடையாது.. அது காலப்பயணம் என்று வியந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications