Gold rate today: இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் தங்கம் விலை.. நகை வாங்க பிளான் இருக்கா? இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (gold rate today) கடந்த 8 ஆம் தேதி வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை ஆவணி மாதம் பிறக்க இருப்பதால் பலரும் நகை வாங்க திட்டமிட்டு வருகிறார்கள்.
தங்கம் விலையை பொறுத்தவரை தாறுமாறாக உயர்ந்து வரு நகைபிரியர்களை கலங்கடித்து வருகிறது. போகிற போக்கை பார்த்தால் தங்கம் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொடுவதெல்லாம் இன்னும் சில மாதங்களில் நடந்து விடுமோ என நினைக்கும் அளவிற்கு விலையானது கிடு கிடுவெனெ உயர்ந்து வருகிறது.

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக சமீபத்திய உலகளாவிய வரி பிரச்சனை போன்றவற்றால் தங்கம் விலையானது கடுமையாக உயரத்தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 08.08.2025 அன்று ஒரு சவரன் ரூ.75,760 - க்கு விற்பனையாகி வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் சற்று சரிவை சந்தித்து வருகிறது. நாளை ஆவணி மாதம் பிறப்பதால் திருமண வீடு போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் விலை குறையுமா? என தினசரி மார்க்கெட் நிலவரத்தை பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய தங்கம் விலை என்ன?
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது சரிவைத் தொடங்கியுள்ளது நகை பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.74,240 ஆக இருந்த நிலையில் விலை சற்று குறைந்து நேற்று ஒரு சவரன் ரூ.74,200 ஆக உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இருக்காது.
இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை:
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (இன்று)
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (நேற்று)
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240.












Click it and Unblock the Notifications