gold rate : தங்கம் விலை இன்று சென்னையில் அதிகரிப்பு.. வெள்ளி விலை நம்ப முடியாத வேகத்தில் உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் 20ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 160 ரூபாய் உயர்ந்து சவரன் 99 ஆயிரத்து 200க்கு சென்னையில் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 226 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவிற்கு 5000 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 226,000க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கொரோனாவிற்கு பின்னர் தான் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் உயர தொடங்கியது. வெறு 25 முதல் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம், 50 ஆயிரத்தை 4 ஆண்டுகளில் தொட்டது . கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. அதன்பிறகு தங்கம் விலை அடுத்தஒரு வருடத்தில் 100 சதவீதம் ஏறி உள்ளது.

gold price as of December 20th in chennai The price of gold is being sold at 99 200 per sovereign

அதேநேரம் தங்கம் விலையை பொறுத்தவரை ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200 (ஒரு கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையை எட்டியது. அதன்பிறகு மின்னல் வேகத்தில் உயர தொடங்கியது. தினமும் 2000, 3000 என்று உயர தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.

அந்தநேரத்தில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை உயர்ந்தது ஆனால் அதன் விலையில் இடையில் சட்டென சரிவு ஏற்பட்டது விலை படிப்படியாக குறைந்து ஒரு பவுன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த நவம்பர் 5-ந் தேதி விற்பனை ஆனது. எல்லாருமே தங்கம் விலை சரியும் என்று கணித்தார்கள்.. ஆனால் தங்கம் விலை உயரவே செய்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனையாகியது.

கடந்த டிசம்பர் 11ம் தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. ஆனால் டிசம்பர் 12ம் தேதி காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், பவுனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. டிசம்பர் 13ம் தேதி, 14ம் தேதிகளில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே ரூ.98 ஆயிரத்து 960-க்குத்தான் விற்பனையானது.

ஆனால் டிசம்பர் 15ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை ஒட்டுமொத்தமாக கிராமுக்கு 145 உயர்ந்து ஒரு கிராம் 12,515க்கு விற்பனையானது. ஒரு சவரன் டிசம்பர் 15ம் தேதி மாலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. அதேநேரம் டிசம்பர் 16ம் தேதி சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்து 98 ஆயிரத்து 800 ஆக விற்பனையானது.

கடந்த 17ம் தேதி சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 200 என்கிற அளவில் உயர்ந்த தங்கம், டிசம்பர் 18ம் தேதி சவரனுக்கு 320 ரூபாய் உயரந்து, 99 ஆயிரத்து 520 என்கிற அளவில் நேற்று விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 440 ஆக சென்னையில் விற்பனையானது. தங்கம் விலை டிசம்பர் 19ம் தேதியான நேற்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 99040 ஆக விற்பனையானது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 350க்கு விற்பனையானது. டிசம்பர் 20ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 160 ரூபாய் உயர்ந்து சவரன் 99 ஆயிரத்து 200க்கு சென்னையில் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 226 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவிற்கு 5000 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 226,000க்கு விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+