டிரம்பால் எகிறுது தங்கம்.. இனிமேல் குறைய வாய்ப்பு இருக்கா? உடைத்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.16,200க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை விற்பனை செய்யப்பட்டு வருவதால், சாமானிய மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், தங்கம், வெள்ளி விலை உயர்வை இரு வகையாக பார்க்க வேண்டும். அதில் ஒன்று, டிரம்ப் மற்றும் அமெரிக்கா பிரச்சனை. டிரம்ப் தனது நண்பர்களையும் எதிரியாக மாற்றி எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

தென் கொரியா, டென்மார்க், ஐரோக்கிய யூனியன் எல்லோருக்கும் டாலர் மீதான நம்பிக்கை போய்விட்டது. இதனால் அனைத்து மத்திய வங்கிகளும் டாலரை விற்றுவிட்டு தங்கத்தை வாங்குகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை உயர்வுக்கு சீனாவின் பிரச்சனையே காரணம். சீனா வெள்ளியை ஏற்றுமதி செய்ய மறுக்கிறார்கள்.
இந்தியாவில் நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி மீதான வரியை ஏற்றப் போகிறார்கள் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால் வெள்ளி விலையை ஏற்றி வைத்துள்ளார்கள். அதேபோல் தீபாவளி முதலே வெள்ளி தான் அடுத்த தங்கம் என்று பலரும் அதிகமாக வாங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் வெள்ளியை வைத்து வங்கிகளில் கடன் வாங்க முடியாது.
அதேபோல் வெள்ளி வாங்கும் விலைக்கும், விற்கும் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த மத்திய வங்கியும் வெள்ளியை வாங்க மாட்டார்கள். ஆனால் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்கும். என்னுடைய 40 ஆண்டு கால மார்க்கெட் அனுபவத்தில் வெள்ளி 4 முறை 50 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால் தங்கம் அப்படியல்ல. தங்கம் இறங்கினாலும், இந்திய ரூபாய் மதிப்பும் இறங்கும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92. கடந்த 10 ஆண்டுகளில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. விராட் கோலி சதம் அடிப்பாரா என்று தெரியாது.. ஆனால் விரைவில் ரூபாய் மதிப்பு 100ஐ எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications