Gold rate today: வரலாற்று உச்சம்.. தடாலடியாக உயர்ந்துபோன தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டியது
சென்னை: தங்கம் விலை (Gold rate)விடாமல் உயர்ந்து வருகிறது. தினம் தினம் புது உச்சம் தொட்டு வரும் தங்கம் விலையால் நகை பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுவரை இல்லாத அளவாக விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இன்றும் தடாலடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று காலையில் சென்னையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ள நிலையில் பிற்பகல் மேலும் ரூ.680 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தினம் தினம் புதிய சாதனையை படைத்து வரும் தங்கம் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 46 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இவ்வளவு விலை உயருமா என நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உச்சத்தை தொட்டு இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டிரம்பின் வரி விதிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்புகளால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடித்துள்ளது. இதனால், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி பெரும் முதலீட்டாளர்கள், அதிக அளவில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து அதிரவைத்து வருகிறது. கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.87,600 ஆக உயர்ந்து உச்சம் தொட்டது. அதன்பிறகு நேற்று முன் தினம் மீண்டும் அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.89 ஆயிரம் ஆனது. நேற்று மேலும் உயர்ந்து ரூ.89,600 ஆக அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.
ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டியது
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,200 ஆக விற்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் சவரனுக்கு ரூ.14,400 உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரூ.32,400 கூடியுள்ளது. இப்படி தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, லாபகரமானது என்று கருதி நகை வாங்குவோர் மட்டும் இன்றி முதலீட்டுக்காகவும் தங்கத்தை பலரும் விரும்பி வாங்குகிறார்கள்.
இதனால், தங்கம் விலையானது தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் கூறி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை வேறு நெருங்கும் நிலையில் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என நகை பிரியர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை இன்று குறையுமா? இல்லை வழக்கம் போல அதிகரிக்குமா? என எதிர்பார்த்த நிலையில் மேலும் புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று தங்கம் விலை சென்னையில் கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ரூ.11,300-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலையில் மட்டும் ரூ.800 அதிகரித்து ரூ.90,400-க்கு விற்பனை ஆகியது.
இந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் பிற்பகலில் ரூ.680 அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினந்தோறும் இப்படி தடாலடியாக உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைபிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (இன்று பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (இன்று காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600 (நேற்று)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று காலை)
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.












Click it and Unblock the Notifications