Gold Rate: காலையில் குறைந்த தங்கம் இன்று மாலையில் கிடுகிடுவென அதிகரிப்பு.. புதிய உச்சத்தில் விலை
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 3) காலையில் சவரனுக்கு ரூ 880 குறைந்த நிலையில் மாலையில் திடீரென்று அதிகரித்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ.480 வரை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.87,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.10,900க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாறி மாறி வருகிறது. கடந்த 4 வாரங்களாக தங்கம் விலை தினமும் கிடுகிடுவென அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 ஆயிரம், ரூ.85 ஆயிரத்தை கடந்து பயணித்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,950க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.87,600க்கு விற்பனையானது. இன்று காலையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. சவரனுக்கு ரூ.880 வரை தங்கம் விலை சரிவை சந்தித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.86,720 ஆக குறைந்தது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.110 வரை குறைந்து ரூ.10,840 க்கு விற்பனையானது.
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இன்று சரிவை சந்தித்ததால் நகை பிரியர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர். ஆனால் இந்த நிம்மதி நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் இன்று மாலையில் தங்கம் விலையில் 2வது முறையாக மாற்றம் ஏற்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை இன்று மாலையில் மீண்டும் அதிகரித்தது.
தங்கம் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.480 வரை அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.87,200க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.10,900க்கு விற்பனையாகிறது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 வரை தங்கம் விலை சரிந்த நிலையில் மாலையில் ரூ.480 வரை அதிகரித்துள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை நிலவரம்)
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720 (காலை நிலவரம்)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025- ஒரு சவரன் ரூ. 86,880
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications