Gold Rate Today: லெஃப்ட்ல இண்டிகேட்டர்.. ரைட்ல கை! ஸ்ட்ரைட்டா போகும் தங்கம் விலை.. சென்னையில் ரேட்?
சென்னை: தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக சரிவைச் சந்தித்து வந்தது. இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். 2025 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.
ஏப்ரல் 1ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ 68,080-க்கு விற்பனையானது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,200 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 74,320-க்கு விற்பனை ஆனது.
வரலாறு காணாத உச்சம்
அதிரடியாக உயர்ந்தது போல நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.275 குறைந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று 2-வது நாளாக சரிவை சந்தித்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து 9,005க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக தொடர் சரிவு
கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் இன்றைய தங்கம் விலை அப்டேட் வெளியாகியுள்ளது. தங்கம் விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை. நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 9,005க்கு விற்பனை ஆகிறது.
கடந்த ஏப்ரல் 1 முதல் தங்கம் விலை நிலவரம்
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040 (மாற்றம் இல்லை)
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
19.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
18.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
17.04.2025- ஒரு சவரன் ரூ.71,360
16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300 (காலை)
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080












Click it and Unblock the Notifications